திருமுருகன் திருவெம்பாவை.27
வெண்டளை விரவிய
எட்டடிக் கொச்சகம்
***
நெஞ்சிலே வைப்பவர் நீடூழி வாழவே
எஞ்சலை மாற்றிடும் ஏகாந்த ஏந்தலாய்
குஞ்சரி கைத்தலம் கோமானாய்ப் பற்றினான்
வஞ்சியை நாடியே வையகம் வந்துபின்
அஞ்சிய வள்ளியால் அண்ணனை வேண்டினான்
துஞ்சுதல் விட்டிடத் தூயோனைக் கைத்தொழ
தஞ்சமு மாகுவோம் தத்தனாய் மாறுவோம்
மிஞ்சிட யாருளர்? மேதினியி லெம்பாவாய்!
***
எஞ்சலை…இல்லாமையை
ஏகாந்தம்…நாடியே ஒரே பொருள்
குஞ்சரி….தெய்வானை
கோமானாய்…சிறந்தவனாய்
வஞ்சி… வள்ளி
துஞ்சுதல்… தூக்கம்
தத்தன்.. சுவீகாரப் புத்திரன்
மிஞ்சிட…மீறிட
மேதினியில்…பூமியில்

பாடல், இசை, குரல் & ஒளி வடிவம்
முனைவர் பொன்மணி சடகோபன்

[موسيقى] ‏emb emb emb [موسيقى] emb [موسيقى] [موسيقى] [موسيقى] [موسيقى] لا [موسيقى] [موسيقى] [تصفيق] [موسيقى] [موسيقى] ‏emb emb [تصفيق] emb [موسيقى] ‏k

1 Comment

Leave A Reply